திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் ரெய்டு : ஒருவர் கைது
திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் ரெய்டு : ஒருவர் கைது
திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் ரெய்டு : ஒருவர் கைது
ADDED : மே 25, 2010 02:06 PM
மதுரை : மதுரை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர்.
கோவில்பட்டியைச் சேர்ந்தவர் மும்மூர்த்தி. இவரது மகன் பட்டுராஜா, மனைவி கவுசல்யா, மகள் முத்துலெட்சுமி. இவர்கள் அனைவரும் கடந்த 26.04.10 அன்று கப்பலூர் அருகே வந்து கொண்டிருந்த போது சாலை விபத்தில் சிக்கினர். இதில் பட்டுராஜாவும், முத்துலெட்சுமியும் இறந்தனர். திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் பிரதே பரிசோதனை அறிக்கை கேட்டு மும்மூர்த்தியின் சகோதரர் மகன் விண்ணப்பித்திருந்தார். ஆஸ்பத்திரியில் கேட்ட போது ஒரு பிரேதத்துக்கு ரூ. 400 வீதத்தில் 2 பிரேதத்துக்கு ரூ. 800ம், போலீஸ் எப்.ஐ.ஆர்., அறிக்கை அளிக்க ரூ. 200ம், மொத்தமாக ரூ. 1000 தர வேண்டும் என பிரேத பரிசோதனைக்கு உதவியாக இருந்த ராஜ்குமார் கேட்டார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இன்று லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., தலைமையிலான போலீசார் ரசாயனப் பொடி தடவிய பணத்தை ராஜ்குமாரிடம் கொடுக்கச் சொன்னார்கள். பணத்தை புகார் கொடுத்தவரிடம் கொடுத்தனுப்பிய போலீசார் ராஜ்குமாரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.